Saturday, August 7, 2010

மாற்றம்

"மாற்றம் ஒன்றே மாறாதது"

மேலே குறிப்பிட்ட வாக்கியம் அனைவருக்கும் பரிச்சியமானதே.ஆனால் எதில் மாற்றம் வர வேண்டும் என்பதில்தான் நமக்குள் அபிப்ராய பேதங்கள் வருகின்றன.
இன்று நான் பார்த்த செய்தி ஒன்று  என்னை வலி கொள்ள செய்தது.அது இதுதான்.
சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தேவி திரையரங்கிற்கு ஒரு குடும்பம் படம் பார்ப்பதற்கு சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு நுழைவுச் சீட்டு மறுக்கப் பட்டது.காரணம், அந்த குடும்பம் நரிக் குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.
நுழைவுச் சீட்டுக்கு உண்டான கட்டணத்தை கொடுத்துதான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.ஆனாலும் அனுமதி கிடைக்க வில்லை.நீங்கள் நாகரிகமாக உடை அணிய வில்லை மேலும் மூட்டை முடிச்சுகளுடன் உள்ளீர்கள்,அதனால் உங்களை அனுமதிக்க முடியாது என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பெண் நுழைவுச் சீட்டு அளிப்பவரிடம் வாக்குவாதம் செய்வதை பார்த்த ஒரு வழக்கறிஞர், தலையிட்டதால் அவர்கள் அனுமதிக்கப் பட்டனர்,ஆனால் மூன்றாம் வகுப்பில்.
ரஜனிகாந்த்,விஜய் மற்றும் அஜித படம் வெளியாகும் போது ரசிகர்கள் என்ற போர்வையில் அவர்கள்  செய்யும் அராஜகத்தை அனுமதிக்கும் நிர்வாகம்,நரிக்குறவர்களை அனுமதிக்க மறுக்கிறது.

மனிதர்களை எந்த மொழியை சார்ந்தவர்கள்,எந்த இனத்தை சார்ந்தவர்கள் என்று பார்க்காமல்,
மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் மனோபாவம் வளரவில்லையென்றால் இந்த மாதிரி சம்பவங்கள் தினசரி செய்திகளாவதை தவிர்க்க முடியாது.

எனக்குள் பேசுகிறேன்

வணக்கம்.
என் பெயர் திண்டிவனம் கோபாலகிருஷ்ணன கார்த்திகேயன்.
பெயரைத் தவிர என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவே இந்த வலைப் பூ.